ஐரோப்பிய எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன்
ஐரோப்பிய நாடான லாட்வியா எல்லையில் இலங்கை அகதியின் சடலம் மீட்கப்பட்ட அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 28ஆம் திகதி பெலாரஸ் எல்லைக் காவலர்கள் லாட்விய எல்லையில் இரண்டு வெளிநாட்டவர்களைகண்டுபிடித்தனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக பெலாரஸின் மாநில எல்லைக் குழு தெரிவித்துள்ளது.
ஆவணங்கள் மீட்பு
உயிரிழந்தவரும், மற்றொருவரும் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அதற்கான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் லாட்வியன் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாட்விய எல்லை பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய இலங்கையர்கள், தாக்கப்பட்டு அந்தப் பகுதியிலுள்ள ஆற்றில் வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிருடன் மீட்கப்பட்ட இலங்கையரை பெலாரஸ் அதிகாரிகள் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.