ரஷ்ய சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்திய இலங்கையர்!
ரஷ்யாவிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் குழுவிடம் ரஷ்ய மொழியில் பேசி கவர்ந்த இலங்கையர் ஒருவர் சமூக ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார்.
“ரஷ்யா டுடே” (RT) செய்தி நிறுவனம் வெளியிட்ட தொடர் காணொளிகளில் இலங்கையர் இடம்பிடித்துள்ளார்.
சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்திய இலங்கையர்
ரஷ்யாவிலிருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் குழுவிடம் குறித்த இலங்கையர் மிக உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் எந்த தயக்கமும் இன்றி மிகுந்த ஆர்வத்துடன் அவர்களிடம் ரஷ்ய மொழியில் பேசியுள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்ய மொழியை தானாகவே கற்றுக்கொண்டதாகவும் அவர்களுக்கு விளக்கியுள்ளார்.
இந்த உரையாடலின் போது, மாஸ்கோ மற்றும் முர்மானஸ்க் உள்ளிட்ட பல ரஷ்ய நகரங்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொழி மற்றும் புவியியல் அறிவால் சுற்றுலாப்பயணிகளை வியப்பில் ஆழ்த்திய நபரின் அற்புதமான சந்திப்பின் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
மேலும் அவர் சுயமாக கற்றுக்கொண்ட ரஷ்ய மொழித்திறனையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.