வெளிநாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
தாய்லாந்தின் பட்டாயாவில் சனிக்கிழமை இரவு இலங்கை சுற்றுலாப் பயணி ஒருவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
திருநங்கையை அனுமதியின்றி தொட்டமைக்காக இலங்கை பயணி தாக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த திருநங்கையின் பாலினத்தை உறுதிப்படுத்த அவரை இரண்டு முறை தவறாக தொட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுலாப் பயணி
எனினும், அவர் அவர் தொட்டமைக்கான கட்டணமாக 2 பாட் செலுத்த வேண்டியிருந்தாலும், இலங்கை சுற்றுலாப் பயணி அதை செலுத்த மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கோபமடைந்த திருநங்கை இலங்கையரின் தலையில் 4 அல்லது 5 முறை பாதணிகளால் தாக்கியுள்ளார்.
54 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரத்தம் வடிந்து கொண்டிருந்த இலங்கையரை காப்பாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல் - இந்திரஜித்





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 41 நிமிடங்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
