ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
இத்தாலியில் இலங்கையர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காண்டிச்சி என்ற பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இத்தாலியில் வீட்டுப் பணியாளராக செயற்பட்டு வருகின்றார்.
இலங்கையர் மீது தாக்குதல்
பணிக்கு செல்லும் போது அவரது வீட்டின் முன்னால் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டு பெறுமதியான ஐபோன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அரை மயக்கத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில், மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைத்தொலைபேசியை திருடும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாம் பிரிக்கவில்லை: முன்னாள் புலனாய்வு அதிகாரி அம்பலப்படுத்தும் விடயம்
கோமா சிகிச்சை
கொள்ளையன் கையடக்கத் தொலைபேசியை திருடிய பின்னரும் கீழே விழுந்த இலங்கை நபரை கொடூரமாக தாக்கியுள்ளார்.
ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவராலேயே குறித்த இலங்கையர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்த இலங்கையர் தற்போது கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக இத்தாலிய மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.