வெளிநாட்டிலிருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளுடன் நாடு திரும்பிய இலங்கையர் அதிரடியாக கைது
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தங்க நகைகளை நாட்டிற்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்
சந்தேகநபர், கண்டி, பல்லேகெலேயைச் சேர்ந்த 51 வயது தொழிலதிபர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் கொண்டு வந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 365,191,120 என மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்கத்துறை விசாரணை
சந்தேகநபர் நேற்று (03) துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, 996 கிராம் எடையுள்ள நகைகளை நான்கு பொதிகளில் தனது உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், மேலதிக விசாரணைக்காக அந்த பயணியையும் அவர் கொண்டு வந்த நகைகளையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (04) அதிகாலை வரை இவ்விடயம் குறித்து முறையான சுங்கத்துறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த பயணிக்கு ரூ. 3.7 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri