ஐரோப்பிய நாடொன்றில் பெருந்தொகை யூரோவுடன் சிக்கிய இலங்கையர் - விசாரணையில் அம்பலமான ரகசியம்
ஐரோப்பிய நாடான இத்தாலியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெரோனா பிரின்சிப்பேல் பொலிஸ் நிலைய அதிகாரிகளின் தலையீட்டைத் தொடர்ந்து 43 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருட்களை விநியோகிக்கும் நோக்கத்துடன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்படவுள்ளது.
யூரோவுடன் சிக்கிய இலங்கையர்
இந்த நடவடிக்கையின் போது Carabinieri பாதுகாப்புப் பிரிவினரால் 30.79 கிராம் ஹஷீஷ், 9.10 கிராம் ஹெரோயின், 0.93 கிராம் கொக்கேயின், பல்வேறு பெறுமதியிலான நாணயத்தாள்களாக 5,280 யூரோ பணம் மற்றும் போதைப்பொருட்களை அளவிட்டுப் பொதியிடுவதற்கான உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

சட்டரீதியான நடவடிக்கைகளுக்காக Via Salvo D'Acquisto உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 43 வயதுடைய குறித்த நபர், நீதிமன்ற உத்தரவுக்கமைய, விசாரணைக்கு உட்படுத்தப்படும் வரை ஆரம்பத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை காலை வெரோனா நீதிமன்றில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அந்த உத்தரவை உறுதி செய்த நீதிபதி, சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை
வெரோனா நகர எல்லைக்குள் மட்டும் தங்கியிருக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளியே செல்லத் தடை விதித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவரின் தரப்பு வாதத்திற்காக மேலதிக கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின் உயர்தர மாணவிக்கு நேர்ந்த அவலம்.. 15 வருடங்களுக்கு பிறகு வெளியான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
you may like this video