முல்லைத்தீவு மக்களுக்காக கடும் கரிசனை காட்டும் இராணுவ தளபதி: செய்திகளின் தொகுப்பு
முல்லைத்தீவு மக்களுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டுமென இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா(Savendra silva) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை இராணுவ தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் படையினருக்கான வருடப்பிறப்பு சிறப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மக்களின் சிறந்த பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும், ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலை நம்பி, பல சவால்களுக்கு மத்தியில் வாழ்வதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,