ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸினால் பாதிக்கப்படும் நூற்றுக்கணக்கானோர்
கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களின் தாமதம் மற்றும் இரத்துச் சம்பவங்களால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
அவர்களில் குறைந்தது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்கியிருந்தனர்.
தாமதமாகச் சென்ற அரசியல்வாதிகள்
அரச சுதேச வைத்திய அமைச்சர் சிசிர ஜயக்கொடி நேபாளத்திற்கு செல்லவிருந்த போதிலும் அவரது விமானம் இரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் ஊடகங்களில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறினால், பத்து மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமாகி பெங்கொக் சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |