14 மாதங்களாக உயிருக்கு போராடிய இலங்கையின் பிரபல நடிகர் மரணம்
இலங்கையின் பிரபல நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 62ஆவது வயதில் இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த வாகனம் யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சிறந்த ஊடகவியலாளர்
நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும், எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர் இந்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் செயற்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
