கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூன்று பிள்ளைகளின் தாய் கொலை
அனுராதபுரம் - தம்புத்தேகம, ராஜாங்கனய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம, ராஜாங்கன பகுதியில் இக்கொலை இடம்பெற்றுள்ளதுடன், பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் ஒருவரே கொலையை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சமரச சபையில் விசாரணை
சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் கணவர் சுகவீனமுற்று உயிரிழந்த நிலையில் குறித்த பெண்ணுடன் சுமார் 13 வருடங்களாக சந்தேகநபர் தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் , பல ஆண்டுகளாக பெண், மற்றும் அவரது சிறிய மகளுடன் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் சிறிய மகளுடன் தகராறு ஏற்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தகராறு சமரச சபைக்கு சென்றுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
அதன்படி, சமரச சபையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பெண்ணின் சகோதரனும் சிறிய மகளும் அதில் கலந்து கொள்ளவில்லை.

இது தொடர்பில் அந்த பெண்ணிடம் கூறியபோதும் அவர் அலட்சியப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்து சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam