இலங்கையில் பேருந்தில் பயணித்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் உயிர் ஆபத்து குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் இருந்து பொலன்னறுவைக்கு தனியார் பேரூந்தில் பயணித்த போது தனக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் குறித்து பெண் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
பேருந்து மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணி
இது மிகவும் ஆபத்தானது. அவர்கள் ஏன் நம் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்? நாங்கள் சாக விரும்பவில்லை. நாங்கள் சுற்றுலாப் பயணிகள். நாங்கள் இலங்கையைப் பார்க்க விரும்புகிறோம். நாங்கள் இங்கே மரணிக்க விரும்பவில்லை.
கண்டிக்கு போகும் திட்டத்தில் உள்ளோம். ரயில் சேவைகள் இல்லாமையினால் பேருந்தில் பயணிக்க வேண்டி உள்ளது. எனினும் பயமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்தின் வேகம் தொடர்பில் காணொளியை பதிவு செய்து பொலநறுவை பொலிஸில் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 2 நாட்கள் முன்

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர் Manithan
