சேவல் சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் கட்சியின் சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவது என இணக்கம் காணப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவல் சின்னத்தில் நீண்டகாலமாக தேர்தலில் போட்டியிடவில்லை. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் கட்சியின் தற்போதைய நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
அத்துடன் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் தேர்தலில் போட்டியிடும் ஏனைய பிரதான கட்சிகளுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் பிரதான அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால், கட்சிக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் கணபதி கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
