மக்களை வாட்டி வதைக்கும் கோதுமையின் விலை! கொழும்பில் கடும் உயர்வு: யாழிலும் அதே நிலவரம்(Video)

Colombo Jaffna Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Benat Sep 24, 2022 11:08 AM GMT
Report

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையினால் இலங்கை மக்கள் தற்போதுவரையில் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

உணவு, கல்வி, தொழில், வாழ்வாதாரம், மருத்துவம், விவசாயம் என அனைத்து வழிகளிலும் பொதுமக்கள் சிக்கல் நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் கடும் அதிருப்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

கடந்த காலங்களில், எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் போன்ற காரணிகள் பொதுமக்கள் பல இன்னல்களை அனுபவித்து வந்த நிலையில் தற்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான பற்றாக்குறை மற்றும் விலை உயர்வு காரணமாக தொடர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

கிட்டத்தட்ட உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை நடத்துனர்களும், அந்த தொழிற்துறையை நம்பியிருப்பவர்களும், வேலையின்மை, வருமானம் இன்மை போன்றவற்றால் தொழிற்துறையை கைவிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 


இந்த நிலையில், சந்தையில் தற்போது கோதுமை மாவிற்கு இருக்கும் கடுமையான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக பொதுமக்கள் மற்றும் பேக்கரி உற்பத்தியாளர்கள் கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளனர்.  

குறிப்பாக கோதுமை மாவின் விலையேற்றமானது மிக உயர்ந்த அளவில் இருப்பதன் காரணமாக கடும் மன உழைச்சலுக்கு பொதுமக்கள் உள்ளாகியுள்ளனர். 

கோதுமையின் விலையானது பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுவதுடன்,  கொழும்பு மாவட்டத்தில் அதியுச்ச விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 

அதேசமயம், நாட்டின் ஏனைய பாகங்களிலும் அதிகூடிய விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் சில இடங்களில் விலை மிக அதிகரித்து காணப்படுகின்றது. 

கொழும்பு

இந்த நிலையில் நாங்கள் சேகரித்த தகவலின் படி கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய விலையில் கோதுமை  மா விற்பனை செய்யப்படுகின்றது.  இதன்படி,  485, 480, 455 மற்றும் 500 ரூபா வரையில் கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்றது. 

அத்துடன், பொதியிடப்பட்ட கோதுமை மாவின் விலை 480 ரூபாவுக்கும் அதிகமான விலையிலேயே விற்பனை செய்யப்படுவதுடன், பிரபல பல்பொருள் அங்காடி ஒன்றில் 390 ரூபாவிற்கு கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக அறியக் கிடைத்தது. 

மலையகம்

பிரதானமாக மலையகத்தைப் பொறுத்தமட்டில் அங்குள்ள மக்களின் பிரதான உணவு வகைகளில் ஒன்றாக ரொட்டி காணப்படுகின்றது. எனவே கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மலையக மக்களிடத்தில் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றது. 

எனினும், ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் மலையகத்தில் 420 ரூபாவிற்குள் கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்றது. 

எமக்கு கிடைத்த தகவலின் படி, 350 ரூபா மற்றும் 380 ரூபா, 390 ரூபா, 415 ரூபா போன்ற விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்றது. 

எனினும்,  கோதுமை மாவிற்கு பற்றாக்குறையும் நிலவுகின்றது.

மக்களை வாட்டி வதைக்கும் கோதுமையின் விலை! கொழும்பில் கடும் உயர்வு: யாழிலும் அதே நிலவரம்(Video) | Sri Lanka Wheat Flour Price

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தைப் பொறுத்த மட்டில் கோதுமை மாவின் விலை 400 ரூபா தொடக்கம் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

410 ரூபா, 420 ரூபா போன்ற விலைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் இதனை விட அதிகமாக விற்பனை செய்யப்படக் கூடிய நிலை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் பொதி செய்யப்பட்ட கோதுமை மாவின் விலையனது 430 ரூபாய் தொடக்கம் 470 ரூபா வரையி்ல் விற்பனை செய்யப்படுகின்றது. 

அதேசமயம், சாதாரணமாக கொள்வனவு செய்யும் போது 320 மற்றும் 330 ரூபாவிற்கும் சில கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மக்களை வாட்டி வதைக்கும் கோதுமையின் விலை! கொழும்பில் கடும் உயர்வு: யாழிலும் அதே நிலவரம்(Video) | Sri Lanka Wheat Flour Price

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 400 ரூபா என்ற அளவில் விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

வவுனியா மற்றும் முல்லைத்தீவு

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் பொதிசெய்யப்பட்ட கோதுமை ஒரு கிலோ கிராம் 390 தொடக்கம் 420 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, முல்லைத்தீவு பகுதியில் 380 ரூபாவிற்கும் அதிகமான விலையில்  கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை மற்றும் மன்னார்

திருகோணமலை மாவட்டத்தில் கோதுமை மா ஒரு கிலோ கிராம் 420 ரூபா என்ற அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக எமது செய்தியாளர் கூறினார். 

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் 420 ரூபாவிற்கும், 390 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், கோதுமை மாவிற்கு கடுமையான  தட்டுப்பாடு நிலவுவதாகவும் கூறப்படுகின்றது.

மக்களை வாட்டி வதைக்கும் கோதுமையின் விலை! கொழும்பில் கடும் உயர்வு: யாழிலும் அதே நிலவரம்(Video) | Sri Lanka Wheat Flour Price

இவ்வாறு கோதுமை மாவின் விலை பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுவதுடன் சில இடங்களில ்நாளுக்கு நாள் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக கோதுமை மாவுடன் தொடர்புடைய உணவுகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுகின்றன. 

எனவே, இது குறித்து அரசாங்கம், உரிய தரப்பினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும், நிலையான ஒரு விலையை நிர்ணயிக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

அல்லது, மிக அதிக விலையில் விற்பனை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US