நாட்டில் சூறாவளி புயலாக வலுவடையவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்! அபாய நிலையில் சிக்கியுள்ள இலங்கை
நாட்டில் சூறாவளி புயலாக வலுவடையவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கைக்கு தென்கிழக்கே உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு பலத்த மழை மற்றும் காற்று வீசும் சாத்தியம் உள்ளதாகவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வானிலை ஆய்வு மையம் வெளியிடும் அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்துமாறு இன்று நண்பகல் நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மதியம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இலங்கையின் தென்கிழக்கில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக வலுவடைந்து வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ....