ஆரம்பித்து வைக்கப்பட்ட இலங்கையின் பெரிய நீர்வழிப் போக்குவரத்துப்பாதை
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று (04) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
மிக நீண்டகாலமாக மிக மோசமான நிலையிலிருந்த பாதையானது பலரது வேண்டுகோளின் அடிப்படையில் புதிய பாதை சேவையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சேவையில் ஈடுபட்டுவந்த இயந்திரப்பாதை
இதற்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டு இரண்டு இயந்திரப்பாதைகளும் கொள்வனவு செய்யப்பட்டு போக்குவரத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் ஊடாக தினமும் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்களும்,பாடசாலை மாணவர்களும்,ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களும் பயணம் செய்யும் நிலை காணப்படுகின்றது.
எனினும் கடந்த காலத்தில் சேவையில் ஈடுபட்டுவந்த இயந்திரப்பாதையானது மிக மோசமான வகையில் சேதமடைந்திருந்ததன் காரணமாக மக்கள் ஆபத்தான பயணத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
