மீண்டும் யுத்தமா - அரசிடம் துரைரெட்ணம் கேள்வி
"மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகப்போகின்றதா? அல்லது இராணுவம் வேறு ஏதும் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றதா என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் தெரிவித்ததாவது,
"இலங்கை அரசால் யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்குப் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளைக் கையகப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

வடக்கு - கிழக்கில் சுமூகமான நிலை
வடக்கு - கிழக்கில் தற்போது சுமூகமான நிலை இருக்கின்றபோது இங்கு ஏன் முப்படைகளுக்கான காணி தேவைப்படுகின்றது? இங்கு ஏன் காணிகள் கையகப்படுத்தப்பட வேண்டும்.

மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகப் போகின்றதா அல்லது இராணுவம் வேறு ஏதும் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க இருக்கின்றதா அல்லது வடக்கு - கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் பொதுவான காணிகள் இருக்கக் கூடாது என்பதற்கான செயல் வடிவங்களை அரசு தொடங்கி இருக்கின்றதா?
மத்திய அரசு, வடக்கு - கிழக்கை எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று பார்க்காமல்
உடனடியாக இந்தக் காணிகளை கையகப்படுத்தும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றார்.
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan