இலங்கை - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் : முக்கிய வீரருக்கு ஓய்வு
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 20க்கு20 தொடரின் போது காயம் அடைந்த பதும் நிஸ்ஸங்க, இன்னும் முழுமையாக குணமடையாததால், அவருக்கு இன்று (20) ஆரம்பமாகும் முதல் ஒருநாள் போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரின் ஆரம்ப ஆட்டம் இன்று கண்டி பல்லேகலேயில் நடைபெறவுள்ளது.
சுழல் பந்துவீச்சு
இந்த போட்டியில் நிஸ்ஸங்க இல்லாத நிலையில், குசல் மெண்டிஸ் அவிஸ்க பெர்னாண்டோவுடன் ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமிந்து மெண்டிஸ் முக்கியமான 3ஆம் இடத்தில் துடுப்பாடவுள்ளார். காயம் காரணமாக இந்திய தொடரைத் தவறவிட்ட சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மீண்டும் இன்றைய போட்டியி;ல் பங்கேற்கவுள்ளார்.
அவருடன் ஜெஃப்ரி வான்டர்சே மற்றும் துனித் வெல்லலகே ஆகியோரும் சுழல் பந்துவீச்சுக்காக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
