இலங்கை -அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைமை: ஆளும் - எதிர்க்கட்சிக்குள் முரண்
இலங்கை - அமெரிக்க நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைமையை தேசிய மக்கள் சக்தி அரசாங்க உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக கைப்பற்றியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த தலைமையை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்டதாகவும், இதனையடுத்து அரசாங்க உறுப்பினருக்கு வழிவிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா கண்ணியமாக விட்டுக்கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நட்புறவு சங்கம்
அமெரிக்கர்கள் மீது நட்பை திணித்தல் என்ற நிலையை, கடந்த 15 ஆண்டு காலத்தில், நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை நிறுவும்போது தாம் பார்த்ததில்லை என்று ஹர்ச டி சில்வா தமது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1/2: Forcing friendship on the Americans!
— Harsha de Silva (@HarshadeSilvaMP) January 24, 2025
In my 15 years in @ParliamentLK I have not seen what I saw today in reestablishing the #LKA #USA parliamentary friendship association. The #JVP #NPP government forced its way to grab the Chair (traditionally taken by the person… pic.twitter.com/5cwyhv2fhe
எப்போதும் ஒரு அமைச்சர் தான் இந்த குழுவுக்கு தலைமை தாங்கினார் என்பதை கோடிட்டுக் காட்டியுள்ள அவர், கடைசியாக சந்திம வீரக்கொடி மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினராக குறித்த தலைமையை ஏற்றிருந்தார் எனினும் தொடர்ந்தும் இந்த விடயத்தில் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் குசானி ரோஹனதீர மற்றும் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த ஆகியோர், நிகழ்வை ஆரம்பித்து வைத்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங்கிற்கு அருகில் அமர்ந்திருந்த கூட்டத்தின் புகைப்படங்களையும் ஹர்ச டி சில்வா தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |