பாதாள உலக குழுவினரின் ஆதிக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சதான் காரணம்..!
இன்று இந்தநாட்டில் பாதாளஉலககுழுவினரின் ஆதிக்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சதான் காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
லான்சாவை கைது செய்த நேரம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவரை காப்பாற்றுகின்றார்.
பாதாளகுழுவினராக இருந்தாலும் பரவாயில்லை நான் காப்பாற்றுகின்றேன் என்ற செய்தியை அதன் மூலம் அவர் கூறுகின்றார்.
அதுதான் அன்று இந்தநாட்டில் பாதாளஉலககுழுவினர் உருவாக காரணமாகும். அன்றே அவர், அவருக்கு தண்டனை வழங்கியிருப்பாராக இருந்தால் குற்றங்கள் முற்றுப்பெற்றிருக்கும் என குறிப்பிட்டார்.
இவை தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்....