இலங்கையில் கடுமையாக நடைமுறையாகும் சட்டம்: மீறுவோர் உடன் பணி நீக்கம்
ரயில் சேவை உட்பட பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் செப்டம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இது ஒரு மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
பணிப்பகிஷ்கரிப்பு அல்லது வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில்வே ஊழியர்களும் உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சேவையை கைவிட்டவர்களாக கருதப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
இதற்கிடையில், ஒரு தாக்குதலின் அடிப்படையில் ரயில்வே ஊழியர்களின் குழுவால் தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ரயில்வே உதவிக் காவலர்களின் விடுமுறைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று அனைத்து உதவிக் காவலர்களும் நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என ரயில்வே பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
