எரிசக்தி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை நோக்கி இலங்கை!
இலங்கையின் நீண்டகால எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திருகோணமலை எண்ணெய் தொட்டி வளாகத்தை மறுசீரமைக்கும் பணிகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்திற்கு இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாக தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிரந்தர தீர்வு
இரண்டாம் உலகப் போர் காலத்து எண்ணெய் சேமிப்பு வசதிகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, எரிபொருள் விநியோக சவால்களைச் சமாளிக்க ஒரு "நிரந்தர தீர்வாக" அமையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
2025 ஏப்ரல் மாதம் இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, திருகோணமலையை ஒரு பிராந்திய எரிசக்தி மையமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இத்திட்டத்தில் இந்தியாவின் தலையீட்டை எதிர்த்து வந்த தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசு, தற்போதைய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முக்கியமான கொள்கை முடிவை எடுத்துள்ளது.
எண்ணெய் சேமிப்பு திட்டம்
இலங்கை அரசு ஏற்கனவே இதற்கான வரைவு முன்மொழிவை சமர்ப்பித்த நிலையில், தற்போது எரிசக்தி அமைச்சகம் இதன் தொழில்நுட்ப அம்சங்களை ஆய்வு செய்து வருகிறது.
இந்த ஆய்வுகள் முடிந்தவுடன், இந்த திட்டம் டெண்டர் நிலைக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிக தீர்வுகள் நிலையானவை அல்ல. உலகளாவிய எரிசக்தி சூழலைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோகத்தைக் கையாள எங்களுக்கு ஒரு நீண்டகால உத்தி தேவை என்றும் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தியக் கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை வியாபாரிகள் செய்யும் மோசடி! களமிறக்கப்படும் புலனாய்வாளர்கள்..
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri