மத்தியக் கிழக்கு போர்ச் சூழலால் இலங்கை வியாபாரிகள் செய்யும் மோசடி! களமிறக்கப்படும் புலனாய்வாளர்கள்..
எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கடந்த 20ஆம் திகதி முதல் சிறப்பு சோதனை மற்றும் புலனாய்வுத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தையில் நுகர்வோர் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தியக் கிழக்கு பிராந்தியத்தில் தற்போது மூண்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்பட்டு நெருக்கடி நிலை ஒன்று தோன்றியுள்ளது.
தொடர் சோதனை
இதனால், இலங்கையும் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இதனைப் பயன்படுத்தி சில வியாபாரிகள் அத்தியாவிசய உணவுப் பொருட்கள், எரிவாயு மற்றும் எரிபொருளை மறைத்து வைத்து சந்தையில் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.
மேலும், பொருட்களின் விலைகளை நியாயமற்ற முறையில் பல வர்த்தகர்கள் உயர்த்தி வருவதன் காரணமாக, அதனை தடுக்கம் நோக்குடன் இந்த சிறப்பு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய சந்தை முறைகேடுகளைத் தடுப்பதற்காக, அதிகாரசபையின் அனைத்து புலனாய்வு அதிகாரிகளும் வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ், சேமிப்பகங்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் வழக்கமான ஆய்வுகளுக்கு மேலதிகமாக அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், பொருட்களை மறைத்து வைக்கும் வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்பனை செய்வது, பொருட்களின் மீது பதிவு செய்யப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது, விலையைக் காட்சிப்படுத்தாமல் இருப்பது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது, தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வது மற்றும் ரசீதுகளை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட வர்த்தக முறைகேடுகள் தொடர்பாக சோதனைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

எரிவாயு விநியோகஸ்தர்கள் மற்றும் எரிபொருள் நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், நுகர்வோருக்குத் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்ய நுகர்வோர் விவகார ஆணையம் தலையிடும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் தொடர்புடைய சட்டங்களை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக, நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் கீழ் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து விசாரணை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் எதிர்கொள்ளும் ஏதேனும் அநீதி அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை, அலுவலக நேரங்களில் 1977 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் ஆணையத்திடம் முன்வைக்க முடியும்.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri