கனடாவில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி : தெய்வாதீனமாக தப்பிய உயிர்
கனடாவில் (Canada) இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவரை யானை தாக்கிய சம்பவம் பதிவாகி உள்ளது.
சீகிரியாவில் (Sigiriya) சூரிய உதயத்தை காண்பதற்காக நடந்து சென்ற வேளையில் இன்று அதிகாலை தாக்குதல் சம்பவம் நடந்தள்ளது.
யானையின் தாக்குதலுக்கு உள்ளான பெண் தம்புள்ளை (Dambulla) ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா பயணச்சீட்டு
சீகிரிய சுற்றுலா பயணச்சீட்டு அலுவலகத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை சுற்றுலா வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் யானையை கலைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சுற்றுலா வழிகாட்டி தனது மோட்டார் சைக்கிளின் ஒலியை எழுப்பி பிரதான மின் விளக்கை பயன்படுத்தி காட்டு யானையை விரட்டியுள்ளார்.
திறப்பு விழாவில் பெரிய பிரச்சனை.. போட்டுக்கொடுத்த ஞானம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam