கடந்த மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை டொலர்
சுற்றுலா பயணிகளை கவிர்ந்திழுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்யத் தேவையான ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 115,328 ஆகும் என சபை தெரிவித்துள்ளது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan