இலங்கைக்கு படையெடுக்கும் இந்தியர்கள்
வருடத்தின் இதுவரையான நாட்களில் நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளுள் பெரும்பாலோனோர் இந்தியர்கள் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
வருடத்தின் இதுவரையான நாட்களில் நாட்டுக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளதாகவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
இதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 212,838 ஆகும்.

இவர்களுள், அதிகளவானவர்கள் இந்தியர்கள் என்பதோடு, அவர்களின் எண்ணிக்கை 37,383 ஆகும்.
இதனைத் தவிர ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 20 மணி நேரம் முன்
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri