மாவைக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரனின் முகநூல் கணக்கில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தனது 82ஆவது வயதில் நேற்றிரவு (29) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் காலமானார்.
இவரின் இறப்பிற்கு பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்து வரும் நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ளார்.
தமது அனுதாபத்தில், மாவை சேனாதிராஜா பேரினவாதத்திறகு எதிரான மாபெரும் அடையாளமாக ஆறு தசாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்தவரும் 1970களில் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவரும் ஆவார்.
அவரது மறைவினையொட்டிய எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், பதிவையிட்ட சுமந்திரனின் முகநுாலில் உள்ள பின்னூட்ட (Comment) பகுதியில் பின்னூட்டத்தை பதிவு செய்வதற்கான எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
