நெடுந்தீவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு
இலங்கை கடற்படை உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததமைக்கும், இதனால் 2 இந்தியர்கள் காயமடைந்தமைக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் செயல்களே காரணம் என்று¸ இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சனா பனாகொட குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காஞ்சனா பனாகொட, இந்திய கடற்றொழிலாளர்கள், இலங்கையின் கடற்படையினர், தங்கள் கடமைகளைச் செய்வதைத் தடுக்க முயன்றதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறியுள்ளார்.
கடற்படை படகில் ஏறும்போதும், இந்திய கடற்றொழிலாளர்கள் ஆக்ரோசமாக நடந்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
முன்னதாக, நெடுந்தீவுக்கு அருகே 13 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட போது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் ஓன்று, நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.
எனினும், இந்திய கடற்றொழிலாளர்கள், கடற்படை படகில் ஏறும் போது, கடற்படையினருடன் ஆக்ரோசமாக நடந்துக்கொண்டதாகவும், இதன் விளைவாகவே தற்செயலாக ஒரு ஆயுதம் வெடித்தததாகவும் கடற்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 இந்தியர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சக்திவாய்ந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்தியாவில் தயாரிக்கப்படும்: வெளியான முக்கிய அறிவிப்பு News Lankasri
