இலங்கைக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்
2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39 ஆயிரத்து 415
சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 481 ஆகும்.
நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள்
அதன்படி, இந்தியாவிலிருந்து 6 ஆயிரத்து 183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2 ஆயிரத்து 928 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 2 ஆயிரத்து 921 சுற்றுலாப் பயணிகளும், ஆஸ்திரேலியாவிலிருந்து 1,708 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளனர்.

மேலும், அமெரிக்காவிலிருந்து 1,605 சுற்றுலாப் பயணிகளும்,போலந்திலிருந்து 1,539 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 1,228 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,196 சுற்றுலாப் பயணிகளும், நெதர்லாந்திலிருந்து 1,163 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan