ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கை! - ரணில் விக்கிரமசிங்க
இலங்கை, தற்போது ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால், அனைவரும் ஒரே கொள்கையோடு செயற்பட வேண்டும். பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நாட்டு மக்களுக்கு விரைவாக நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
கூட்டணி ஒன்று அமைப்பதால் மாத்திரம் வெற்றிபெற்றுவிட முடியாது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் ஒன்று உள்ளதா? என்றே மக்கள் பார்ப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
கோவிட் தொற்றாலும், கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த கப்பலாலும் நாட்டுக்கு பாரியப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள போதிய அந்நிய செலாவணி இல்லை.
இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களே முதலில் அவசியமாகும்.
எவ்வாறாயினும், ஜப்பானின் நிலைமையில் இருந்த இலங்கை, தற்போது ஆப்கானிஸ்தான் நிலைக்கு சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
