மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் - இஸ்ரேலுக்கான விமான சேவையை ஆரம்பித்த இலங்கை
இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இஸ்ரேல் மீது கடந்த 13ஆம் திகதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், வான்வெளி மூடப்பட்டு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவை
அந்தவகையில் கொழும்பிலிருந்து டெல் அவிவ் நகருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி காலை ஆர்க்கியா என்ற விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பயண ஏற்பாடுகளை உறுதிசெய்து, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர், ஏற்கனவே உள்ள விமானப் பயணச்சீட்டுகளைக் கொண்டுள்ள பயணிகள் தமது முன்பதிவுகளை உறுதிப்படுத்துமாறு தூதுவர் நிமல் பண்டார அறிவுறுத்தியுள்ளார்.
இதுமட்டுமன்றி புது டெல்லியிலிருந்து டெல் அவிவ் (Tel Aviv) நகருக்கு ஏர்-இந்தியா (Air india) விமானங்கள் ஏப்ரல் 18 முதல் மீண்டும் தொடங்கும் என்பதோடு இது கொழும்பிலிருந்து புது டெல்லி வழியாக வரும் பயணிகள் இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், FLY DUBAI ஏர்லைன்ஸ் டுபாய் மற்றும் அபுதாபியில் இருந்து இஸ்ரேலுக்கு விமானங்களை ஆரம்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |