இலங்கைக்கு அடுத்த வருடம் வரை காத்திருக்கும் பெரும் தாக்கம் - மோசமான விளைவுகளை சந்திக்கவுள்ள மக்கள்
ஒரு தசாப்தத்தின் பின்னர் ஏற்படும் மிக வலுவான எல்-நினோ (El-Nino) நிலைமையின் தாக்கம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக ஜூலை - ஓகஸ்ட் மாதங்களில் இலங்கையில் வறண்ட காலநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
வெப்பநிலை அதிகரிப்பு
இதன் காரணமாக, கிழக்கிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள், வெப்பமான அலைகளை ஆசிய பிராந்தியத்தை நோக்கி திருப்புவதற்கு செல்வாக்கு செலுத்துவதுடன், வளிமண்டல வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த எல்-நினோ நிலைமை காரணமாக இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பிராந்தியங்களில் சாதாரண மழைவீழ்ச்சி குறைவடைந்து, கடுமையான வறட்சி நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
இதற்கமைய, இந்த ஆண்டின் ஜூன் முதல் ஓகஸ்ட் வரையான காலப்பகுதிக்குள் எல்-நினோ நிலைமை ஏற்படக்கூடும் என்றும், நவம்பர் மாதம் வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் வானிலை அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.
இலங்கைக்கு தாக்கம்
இருப்பினும், இலங்கைக்கு இதன் தாக்கம் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கம் காரணமாக 2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் ஆசியா முழுவதும் பயிர்ச்செய்கை மற்றும் உணவு விநியோகம், உரத்தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவற்றில் மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என எச்சரித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan