தமிழ் - முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த முன்னெடுக்கப்பட்ட சதி
வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து தமிழ் - முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
வீரமுனை படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், "இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே கிழக்கு மாகாணத்தை அபகரிக்க வேண்டும்.
கல்லோயாக் குடியேற்றம்
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் கல்லோயாக் குடியேற்றத்தினைக் கொண்டு வந்தார்கள்.
1921ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் அடிப்படையில் வெறுமனே நூற்றுக்கணக்கிலேயே சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தர்கள். ஆனால் இன்று 25 வீதத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதம் கிழக்கு மாகாணத்தை கபளீகரம் செய்ய வேண்டும்.
இதனையும் சிங்கள மாகாணமாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்பட்டிருந்தாலும் 1983 காலகட்டத்தின் பின்னர் வடக்கு கிழக்கிலே விடுதலைப் போராட்டம் வீரியமடைந்ததைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித்தந்திரத்தின் மூலம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் காலகட்டத்திலே தான் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலே சில பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
