அமைச்சர் விஜித ஹேரத்தை இலக்கு வைத்து வெளியான காணொளி!
அமைச்சர் விஜித ஹேரத்தை இலக்கு வைத்து செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் திரிபுபடுத்தப்பட்டதாக கூறப்படும் காணொளி தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பிரபல இளைஞர் ஆர்வலர் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காணொளி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக ஜேவிபி பின்னணியில் அமைச்சர் விஜித ஹேரத்தை ஒத்த ஒரு படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அதனுடன் அவதூறான கருத்துகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
அமைச்சர் விஜித ஹேரத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமிந்த ஜயநாத், இந்த உள்ளடக்கம் அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஜேவிபியை அவதூறு செய்யும் நோக்கம் கொண்டதாகத் தெரிவித்தார்.
காணொளியை இடுகையிட்டதற்குப் பொறுப்பான கணக்கு வைத்திருப்பவர் மீது உடனடி விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா




