கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்களின் தொடர் போராட்டம் (Photos)
"கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்" என்னும் தொனிப் பொருளில் அம்பாறை திருக்கோவில் பகுதியில் போராட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல் முனைவின் 47வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16.09.2022) காலை அம்பாறை திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் தீர்வுக்கான கோரிக்கை
குறித்த போராட்டத்தில் பிரதேச மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய, கடற்றொழிலாளர் அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இதன் போது “நாங்கள் நாட்டை துண்டாடவோ தனி அரசோ கேட்கவில்லை”, “இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்”, “எமக்கு வேண்டும் எங்கள் நிலம்”, “ஒன்று கூடுவது எமது உரிமை”,“வடக்கு கிழக்கு மக்களுக்கு அதிகார பகிர்வு என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும்” போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல்முனைவின் 46 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பிரதேசத்தின் மகிழங்கேணி கிராமத்தில் நேற்று (15.09.2022) இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இச் செயற்றிட்டத்தில் சாவகச்சேரி பிரதேச மக்கள், சிவில் சமூக அமைப்புக்கள்,
பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் விவசாய, கடற்றொழிலாளர் அமைப்புக்கள், என பலரும் கலந்து
கொண்டு கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்தனர்.









புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
