தமிழ் கட்சிகள் ஒன்றுசேரும் நிலை தற்போது! ஒரு துறவி அரசியலிற்கு வருவதில் தவறில்லை
ஒரு துறவி தேர்தல் அரசியலில் ஈடுபட்டு பதவிக்கு வருவாராக இருந்தால் அதில் எந்த தவறும் கிடையாது என சாஸ்திர நூல்கள் எடுத்து சொல்வதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
லங்காசிறியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“அவ்வாறான ஒருவர் பதவிக்கு, பணத்திற்கு, புகழிற்கு ஆசைப்படுவராக இருந்தால் அது சந்நியாசத்திற்கு விரோதமானது.
தமிழ் சம்மந்தப்பட்ட தமிழ் தேசியம் சார்ந்த தரப்புகளை, சிவில் சமூகங்களை ஒரு நிலைப்பாட்டின் கீழ் கொண்டு வருவது மிக கடினமான விடயம். யுத்தம் மௌனிக்கப்பட்டதற்கு பிறகு இந்த முயற்சிகள் தோல்வியைதான் தழுவிகொண்டு வருகின்றன.
அதற்கு இலங்கை அரசும், ஏனைய வல்லாதிக்க அரசும், தமிழ் தேசியத்திற்கு எதிரான சக்திகளும் எப்படியாவது தமிழர்களை பிளவுப்படுத்தி விட வேண்டும் என்று தீவிரமாக செயற்படுகின்றனர்” என குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |