தெற்கில் சுட்டாலும் சாதாரணமே: நீதியில்லாத நாட்டில் இந்த நிலை தொடரும் - வேலன் சுவாமிகள்
தெற்கில் இடம்பெறுவது போன்ற வன்முறை சம்பவங்கள் வடக்கு, கிழக்கில் இடம்பெற்றால் அது பூதாகரமாக்கப்படும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அடக்கப்படும் போராட்டங்கள்
வடக்கில் நீதி கோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தெற்கில் அத்துமீறல், வன்முறைகள், நீதிமன்றத்திற்குள் கொலை என்பன இடம்பெறுகின்றன.
எனினும் தெற்கில் நடைபெறும் இவ்வாறான விடயங்களுக்கு எந்தவொரு பாரிய நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இதுவே இவ்வாறான விடங்கள் வடக்கு கிழக்கில் இடம்பெற்றால் அது பூதாகரமாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான செவ்வியின் முழுமையான காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |