இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்படக்கூடும்: ஷம்மி சில்வா எச்சரிக்கை
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் மீது விதித்துள்ள தடையினால் குறித்த நிறுவனத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்படக்கூடும் என இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (11.11.2023) அழைக்கப்பட்ட விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கம்போதே ஷம்மி சில்வா மேற்கண்டவாறு கூறியிருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“வீட்டில் இருக்க வேண்டாமென்று பொலிஸார் கூறினார். போட்டிகளில் தோற்றது பிரச்சினை அல்ல. எங்களைத் திருடர்கள் என சொல்கிறார்கள்.
ஒருபோதும் வெளியேற மாட்டோம்
கண்ணாடி முன் சென்று பார்த்தால் யார் திருடன் என்று அமைச்சருக்கே தெரியவரும். நீதிமன்றம் செல்லுங்கள். அமைச்சர் ஜப்பான் செல்லட்டும். இந்த நாட்டை விட்டு நாம் ஒருபோதும் வெளியேற மாட்டோம். விட்டுக் கொடுக்கவும் மாட்டோம்.
விளையாட்டிற்கு செலவு செய்ய 2900 இலட்சம் கொடுத்தோம். இந்த பணத்தை அவர் தனது நண்பர்களுக்கு செலவு செய்தார்.
இதை தணிக்கை செய்ய சொல்லுங்கள். எங்கள் வருமானத்தில் 20% பணத்தை அவருடைய அமைச்சகத்திற்கு அனுப்புங்கள் என்று அவர் கடிதம் அனுப்பினார்.
நாங்கள் இல்லை என்று சொன்னோம். அவர் எங்கள் மீது கோபப்படுவதற்கு இதுவே முதல் காரணம். நான் 21ம் திகதி ஐசிசிக்கு வேலை நிமித்தமாக செல்லவுள்ளேன்.
ஜனாதிபதியுடனும் நான் பேசுவேன்.
அமைச்சரை வேறு இடத்திற்கு நாம் அழைத்துச் செல்வோம். கின்னஸ் சாதனைவரை செல்லக்கூடிய சிறந்த அமைச்சர் அவர் என்று அவர் நினைக்கிறார்.
அரசியல்வாதியால் நாட்டில் கிரிக்கெட் தோற்றுப் போய்விட்டது. ஒருவன் பொய் சொல்கிறான். மற்றவர்கள் பார்க்காமல் ஆம் என்கிறார்கள்.
ஐசிசி உறுப்புரிமை
ஐசிசி உறுப்புரிமை இடைநிறுத்தத்தினை நீக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு குறைந்தபட்சம் 50 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்.
என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அமைச்சரின் அதிகாரத்தை குறைக்க வேண்டும். இப்படி ஒரு அமைச்சர் வந்தால், இந்த அதிகாரத்தை வைத்து விளையாட்டை வளர்க்க முடியாது.
உலகக் கிண்ணம் நடக்கும் போது, மக்களுக்கு அவர்களின் சம்பளம் பற்றிச் சொல்லப்படுகிறது. அந்த மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.
இது எந்த நாட்டில் நடக்கிறது? வேலைக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த மக்கள் பயப்படுகிறார்கள். நாங்கள் துஷ்மந்த சமிர மற்றும் வனிந்து 15 பேரை அனுப்பினோம்.
அவர் எங்களிடம் உடற்தகுதிப் பரிசோதனையைக் கேட்டார். அந்த இரண்டு பெயர்களையும் நீக்கி அனுப்பச் சொன்னார்.
நான் இந்தியாவுக்குப் செல்லவில்லை. நீங்கள் கொழும்பு ஹோட்டலில் உள்ள சிசிடிவியைப் பாருங்கள். இவை நாடகங்கள். மக்களுக்கு சாப்பாடு இல்லை. ஆனால் இலங்கையில் கிரிக்கெட் மட்டும் தான் பிரச்சினை.
எனக்கு ஜனாதிபதி சான்றிதழ் கொடுத்தால் நான் சென்று ஐசிசியிடம் பேசுவேன்.” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |