காசாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் : பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை
காசாவில் நிலவும் போர் சூழல் காரணமாக அங்கு இருக்கும் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினால் மக்கள் அவதியுறும் நிலை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை காசா நகரில் உள்ள அல் ஷிஃபா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருவோருக்கு, மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் அவர்கள் வலியால் அவதியுறும் நிலை காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
நிறைவடைந்துள்ள வலி நிவாரண மருந்துகள்
இதற்கு முக்கிய காரணம் வைத்தியசாலையில் மயக்க மருந்து மற்றும் வலி நிவாரண மருந்துகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள மக்களையும் சிங்கள ஊடகங்களையும் திரும்பி பார்க்கவைத்த றீ(ச்)ஷா: இயக்கச்சியில் வியக்கவைக்கும் முயற்சி (Video)
இதனால் காயமடைந்து வருவோரின் உயிரை காப்பாற்ற, வேறு வழியின்றி மயக்க மருந்து கொடுக்கப்படாமலேயே அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உள்ளதாக வைத்தியசாலை செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமின் கருத்தின்படி, காசா பகுதியில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் காசாவில் உள்ள 36 வைத்தியசாலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |