அந்நிய செலாவணி சிக்கலில் சிக்கித்தவிக்கும் இலங்கை!
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக அதனை தவிர்க்க இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் தொகையை இலங்கை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் தொற்று காரணமாக, சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறைகளில் இலங்கை பாரிய சரிவினை எதிர்நோக்கியுள்ளதுடன்,அந்நிய செலாவணி சிக்கலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலவரப்படி, வரும் ஜனவரி மாதம் வரை மட்டுமே பெட்ரோல், டீசலை வாங்கும் நிலையில் நாட்டின் பொருளாதார காணப்படுவதாகவும்,இப்பிரச்சினையை சரி செய்ய இந்தியாவிடம் 3,700 கோடி ரூபாய் கடன் தொகையை இலங்கை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய,இலங்கையின் கோரிக்கையை இந்தியா விரைவில் ஏற்றுக்கொள்ளும் என்றும், இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்...
இந்தியாவிடம் 500 மில்லியன் டொலர் கடன் வாங்கும் இலங்கை
எரிபொருள் விநியோகத்துக்கு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உத்தரவாதம்! அமைச்சர் எச்சரிக்கை
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri