எரிபொருள் விநியோகத்துக்கு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உத்தரவாதம்! அமைச்சர் எச்சரிக்கை
தடையில்லா எரிபொருள் விநியோகத்துக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே உத்தரவாதம் அளிக்க முடியும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udhaya Gammanbila) எச்சரித்துள்ளார்.
எரிபொருள் விலை நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு உதய கம்மன்பில நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் (Basil Rajapaksa) கோரியுள்ளார்.
தீர்வு வழங்கப்படாவிட்டால் எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை குறித்து நிதி அமைச்சருக்கு, விளக்கியுள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதிக்கு சாத்தியமான வரிச்சலுகை அல்லது விலை திருத்தம் பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இருக்கலாம் என்று கம்மன்பில குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் அடுத்த வியாழக்கிழமைக்குப் பிறகு மாகாணங்களுக்கிடையேயான பயணத்தடையை நீக்குவதன் மூலம் பேருந்து சேவைகள் தொடங்கும் போது, எரிபொருளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam