சூரிய சக்தி அபிவிருத்திக்கு இலங்கை ஒரு சிறந்த நாடாகும்: பாலித கொஹோன
சூரிய சக்தி அபிவிருத்தி மற்றும் காற்றாலை ஆற்றல் அபிவிருத்திக்கு இலங்கை ஒரு சிறந்த நாடாக உள்ளது என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹோன தெரிவித்துள்ளார்.
சீன ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''இலங்கை தூய்மையான ஆற்றலுக்கு மாறுவதற்கு சீனா பெரும் உதவியாக இருக்கும்.
இதேவேளை, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நம்புவதன் மூலம் நமது எரிசக்தி நெருக்கடியின் பெரும் பகுதியை சமாளிக்க முடியும்.
இந்நிலையில் தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான தூய்மையான ஆற்றல் கருவிகளுக்கான உலக மாநாடு நடைபெற்று வருகிறது.
எரிசக்தி உபகரணத் துறையின் வளர்ச்சி
சுத்தமான எரிசக்தி உபகரணத் துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைப்
பற்றி விவாதிக்க, இலங்கை உட்பட 17 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.