ரோம் சட்டத்தில் இலங்கை ஒப்பமிட வேண்டும்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசுக்குப் பரிந்துரை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் சர்வதேச பிரகடனத்தை 'ரோம் சட்டம்' என்பர், அந்த சட்டத்தை அங்கீகரித்து அதில் ஒப்பமிடுவது குறித்து இலங்கை அரசு பரிசீலிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்றது.
முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசு
அந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் ஐவரும் சேர்ந்து இந்த சிபாரிசை முன்வைத்துள்ளனர்.
ஐ.நாவின் காணாமல்போனவர்களுக்கான குழுவுக்கு இலங்கை அரசு இப்போது ஓர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
அந்த கட்டத்தில், அதற்குச் சமாந்தரமான ஓர் அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் சமர்ப்பிக்க வேண்டும்.
இலங்கை அரசுக்குப் பரிந்துரை
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அந்த அறிக்கையை நேற்று சமர்ப்பித்து வெளியிட்டுள்ளது.
அதிலேயே ரோம் சட்டத்தை ஏற்று ஒப்பமிடுமாறு இலங்கை அரசுக்குப் பரிந்துரைத்திருக்கின்றது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




