இலங்கையில் ஆண்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஆண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைவடைந்து வருவதால், எதிர்காலத்தில் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர் அமிந்த மெத்ஸில இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். 1995ஆம் ஆண்டு பெண்கள் 100 பேருக்கு ஆண்கள் 100.2 பேர் இருந்த நிலையில், தற்போது அந்த விகிதம் பெண்கள் 100 பேருக்கு ஆண்கள் 93.7 பேர் ஆகக் குறைந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இது போன்ற மாற்றத்திற்கு காரணமாக:
• பெண்களின் ஆயுள் காலம் அதிகரித்தது • பெண்கள் பிறப்புக்களின் விகிதம் அதிகரித்தது
• இளைய வயதுடைய ஆண்கள் வெளிநாடுகளுக்கு செல்வது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் – சிறிய அளவிலான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளைத் தவிர – பெண்களின் சதவீதம் அதிகரித்து வருகிறது.
இது, தொழில்துறையிலும், நாட்டின் உற்பத்தித்திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்களுக்கு மட்டுமே உகந்த வேலைகளும் காணப்படுகின்றன.
ஆனால் அந்த வேலைகளைச் செய்ய ஆண்கள் கிடைக்கவில்லை என்றால், நாம் ஒரு பெரும் பணியிடப் பிரச்சனையை எதிர்கொள்வோம்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதை ஒரு சமத்துவத்தன்மை குறைவான நிலை என்றும், இது தொழிலாளர் சந்தையில் பெரும் மாற்றத்தையும், சமூக பிரச்சனைகளையும் உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, பெண்களுக்கு சமமாகத் தகுதியான ஆண்கள் இல்லாதால், அவர்கள் திருமண வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் போல், கல்வி மற்றும் செல்வத்துடன் கூடிய பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆண்கள் கண்டுபிடிக்க இயலும் என தெரிவித்துள்ளார்.
எனினும்,, கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை பெண்கள் திருமணத்திற்கான ஆண்களை தேடுவதில் சிரமங்கள் உருவாகலாம் எனவும் இது நாடு முழுவதும் சமூக அமைப்பை எனவும் பேராசிரியர் மெத்ஸில தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
