ஜெனிவாவில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி - செய்திகளின் தொகுப்பு (Video)
ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் உண்மையில் நடந்தது இலங்கைக்கு ஆதரவாக 27 நாடுகள் செயற்பட்டமையே என ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்த போதிலும் 27 நாடுகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனா, பாகிஸ்தான், பொலிவியா, கியூபா, எரித்திரியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,