சர்வதேச நாணய நிதியத்தின் பகுப்பாய்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வின் கீழ் பொருளாதாரச் செயல்திறனுடன் இணைக்கப்பட்ட பத்திரங்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது தொடர்பான தெளிவுக்காக இலங்கை அரசாங்கமும் இறையாண்மை பத்திரக்காரர்களும் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இறையாண்மை பத்திரகாரர்களின் மார்ச் மாத முன்மொழிவு அதன் கடன் நிலையான கட்டமைப்பிற்கு இணங்கவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்திருந்தது.
இந்தநிலையில், பத்திரதாரர்களுடனான முதல் சுற்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் வெளியிடப்பட்ட இலங்கை அரசாங்க அறிக்கையின்படி ஏப்ரலில் ஒரு புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட முன்மொழிவுகள்
மேலும், அது சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்புக்கு இணங்குகிறதா என்ற மதிப்பீட்டுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது மாத்திரமன்றி, வழமையாகவே சர்வதேச நாணய நிதியம், பங்கு பத்திரக்காரர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாமை காரணமாக அதன் கடன்நிலை தன்மை மதிப்பீடு தொடர்பில் தெளிவுகளை அறிந்துகொள்ள முடியாதுள்ளது.
நாணய நிதியத்தை பொறுத்தவரையில் அது இலங்கை அரசாங்கத்;துடன் மாத்திரமே உடன்படிக்கைகளை எதிர்பார்க்கிறது.
எனவே, விரைவான முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் திருத்தப்பட்ட முன்மொழிவுகள் பரிமாறிக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |