நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அனுராதபுரம் - கல்கிரியாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நெல்லியாகம, பலகல, கல்கிரியாகம என்ற இடத்தில் வசித்து வந்த வஹாப்தீன் அமீன் முனவ்பர் என்ற 50 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த மரணம் தொடர்பான உண்மைகள் கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டது.
பிரேத பரிசோதனை
அத்துடன், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு, சடலம் தொடர்பான பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கமைய, தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை மேற்கொண்டு மரணத்திற்கான காரணம் மாரடைப்பு என குறிப்பிட்டுள்ளார்.
கல்கிரியாகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் ருக்மல் ரத்நாயக்கவின் பணிப்புரையின் பேரில் அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
