உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் வீழ்ச்சி! மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
ஜூலை மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2.1 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 1,854 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள், ஜூலை 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.
மேலும், வெளிநாட்டு நாணய இருப்புகள் 1,708 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையிருப்பு குறைவு
இலங்கையின் கையிருப்பு 2019ஆம் ஆண்டின் இறுதியில் 7.6 பில்லியன் டொலர்களாக இருந்துள்ளதாக தெரியவருகிறது.
முன்னதாக கையிருப்பு 2020 இறுதிக்குள் 5.7 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, கையிருப்பு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 3.1 பில்லியன் டொலர்களாகவும், 2022 மார்ச் இறுதியில் 1.9 பில்லியன் டொலர்களாகவும் குறைந்துள்ளது.
| இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல் |
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri