இலங்கையின் அந்நிய செலாவணிக் கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணிக் கையிருப்பு இந்த வருடம் ஜூன் இறுதிக்குள் 1.85 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கையின் கையிருப்பு 2019 ஆம் ஆண்டின் இறுதியில் 7.6 பில்லியன் டொலர்களாக இருந்தது. எனினும் அன்றில் இருந்து அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக கையிருப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
முன்னதாக கையிருப்பு 2020 இறுதிக்குள் 5.7 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.
பேரண்ட பொருளாதாரம்

மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, கையிருப்பு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 3.1 பில்லியன் டொலர்களாகவும், 2022 மார்ச் இறுதியில் 1.9 பில்லியன் டொலர்களாகவும் குறைந்துள்ளது.
கையிருப்பு குறைவினால் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
எனினும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பல நன்கொடையாளர்கள் நிதி உதவியை வழங்குவதற்கு முன்னர் இலங்கை அரசாங்கம், ஒரு பேரண்ட பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
| சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களில் முன்னேற்றம் - நிதி அமைச்சு |
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam