இலங்கைக்கு வரவுள்ள நான்கு கப்பல்! அரசாங்கம் வழங்கியுள்ள அனுமதி
இலங்கைக்கான டீசல் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை, சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரையிலான, 6 மாத காலத்திற்கு, இலங்கைக்கான டீசலை வழங்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
4 கப்பல் டீசல்
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட விலை மனுக்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 6 மாத காலத்திற்கு 4 கப்பல் டீசல் தொகையை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்திற்காகச் சிங்கப்பூரின் பிபி எனர்ஜி நிறுவனம் விலை மனுவைச் சமர்ப்பித்துள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் குறித்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam