இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம்: சுமந்திரனின் நிலைப்பாடு

United Nations M A Sumanthiran Sri Lanka
By Rakesh Jun 29, 2025 05:36 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம் குறித்து உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமைய வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் இலங்கையின் உள்ளகப் பொறிமுறைகள் ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்ற விடயமும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்கேற்பு அவசியம் என்ற வலியுறுத்தலும் உள்வாங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தந்திருந்தார்.

இதன்போது, அவர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பிரதம நீதியரசர், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்கும் பல தரப்பட்ட குழுக்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.  

வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!

வரலாற்று சிறப்பு மிக்க களுதாவளை பிள்ளையாருக்கு எதிராக நடந்த பெரும் சதியில் சிக்கிய முக்கிய புள்ளிகள்!

உள்ளகப் பொறிமுறை

அதுமாத்திரமன்றி விஜயத்தின் நிறைவு நாளன்று கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில், சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளகப் பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிடவிருக்கும் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமைய வேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம்: சுமந்திரனின் நிலைப்பாடு | Sri Lanka S Accountability Situation Sumanthiran

“முதன்முதலாக 2012 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறுதான் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், அது நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், உள்ளகப் பொறிமுறை ஊடாக எதனையும் செய்யமுடியாது என்பதைப் பேரவை புரிந்துகொண்டது.

சர்வதேசத்தின் பங்களிப்பு

அதனையடுத்து, 2014ஆம் ஆண்டிலேயே இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இலங்கை அரசின் அனுசரணையுடன் பேரவையின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே நாட்டில் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் நிறுவப்பட்டது.

அதன் விசாரணை செயன்முறைகளில் சர்வதேசத்தின் பங்கேற்பை உள்வாங்கக்கூடிய வகையிலேயே அதற்குரிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அலுவலகச் செயன்முறைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பை உள்வாங்குவதற்கு எந்தவொரு அரசும் இடமளிக்கவில்லை.

இலங்கையின் பொறுப்புக்கூறல் நிலவரம்: சுமந்திரனின் நிலைப்பாடு | Sri Lanka S Accountability Situation Sumanthiran

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையின் உள்ளகப் பொறிமுறை ஊடாக எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை என்றும், ஆகையினால் அதில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் உயர்ஸ்தானிகர் அவரது அறிக்கையில் வலியுறுத்த வேண்டும்” என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை விவகாரத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை உள்ளிட்ட ஏனைய கட்டமைப்புக்களுக்குள் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

பொய் பிரசாரத்தில் ஈடுபடும் தற்போதைய அரசாங்கம்.. நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

பொய் பிரசாரத்தில் ஈடுபடும் தற்போதைய அரசாங்கம்.. நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!

146 பயணிகளுடன் புறப்படவிருந்த விமானத்தில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US